தொப்பூர் சாலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு


சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், சேலத்தில் இருந்து சென்ற மணல் லாரியும் தொப்பூரில் நேற்று நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆஷா என்ற பெண் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS