25 ஆண்டுகளாக உப்பு கலந்த நீரை பருகிவரும் கிராம மக்கள்: சிறுநீரக பாதிப்பால் உயிரிழப்பதாக புகார்


விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு பேரூராட்சிக்குட்பட்ட ராமச்சந்திபுரத்தின் சில பகுதிகளில் உப்புகலந்த குடிநீர் விநியோகிக்கப்படுதவால் மக்கள் பல்வேறு உடல்பாதிப்புளை சந்தித்துவருகின்றனர். சிறுநீர கோளாறு போன்ற பிரச்னைகளால் பலர் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவர்‌‌‌களின்‌ இந்த பாதிப்புக்கு கார‌ணம் உப்புத்தன்மையுடைய நீரை பருகியதுதான் என்கிறார்கள்.விருதுநகர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இந்த நிலை காணப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக உப்புகலந்த நீர் பருகிவருவதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பலர் உயிரிழந்திருப்பதாகவும் கடந்த ஆண்டில் மட்டும் 10 பேர் வரை நீரால் உயிரைவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ராமச்சந்திரபுரத்தின் பல பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உப்புநீர் விநியோகிக்கப்படுவது தான் விநோதம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவதுடன் தாமிரபரணி கூட்டு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்திகின்றனர். பல முறை புகார் தெரிவித்திருப்பதாக மக்கள் கூறினாலும் ராமச்சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகியோ தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து தனக்கு எந்தவித புகாரும் வரவில்லை என்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS