இன்று மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அக்னிதீர்த்தக் கடலில் குவிந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் முன்னோர்களுக்கு எள், காய்கறிகளை தர்ப்பணம் செய்து புனித நீராடினர். இதனையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதினிடையே குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், போதிய வாகன நிறுத்த வசதி செய்யப்படாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS