ஊராட்சிகளுக்கான தலைவர் பதவியை ஏலம் விட்ட பொதுமக்கள்


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கிராம ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிகளை ஏலம் விடும் முயற்சி நடந்துள்ளது.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திடுமல், கவுண்டம்பாளையம்,குரும்பலமகாதேவி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளுக்கான தலைவர் தேர்வுக்காக அந்தந்த ஊராட்சிகளில் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளனர். இக்கூட்டத்தில் ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஏலம் மூலம் தலைவர் பதவியை தேர்வு செய்வதாகவும், அதனால் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் திருப்பணியை மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தலைவர் பதவியை ஏலம் விடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவுறுத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS