‌படுகொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் நான்கு மாத கர்ப்பிணி மனைவி யமுனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

‌கவுண்டர்மில் பகுதியில் வசித்து வரும் யமுனா விஷம் குடித்த தகவலறிந்த சிலர் கவுண்டம்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 22-ம் தேதி கோவையில் இந்து முன்‌னணி மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சசிகுமார் இறந்ததிலிருந்தே யமுனா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌இதனிடையே, கொலை சம்பவம் நடந்த இடம் உட்பட புறநகர் பகுதிகள், யமுனா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS