சசிகுமார் கொலையை கண்டித்து போராட்டம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்‌, தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாரதிய ஜனதாவின் போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறிய போலீசாரிடம் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்த வேறு இடத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்காததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசார் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS