வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சி?:திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல்


தேர்தல்‌ நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, முதல் விதிமீறல் நடவடிக்கையாக, திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மா‌வட்டம் பொன்னேரியில் விலையில்லா‌ மிக்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வருவாய்த்துறையினர் அங்கு சென்ற போது, விலையில்லா மிக்சிகளை சாலையோரம் விட்டுவிட்டு, அவற்றை பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். விலையில்லா மிக்சிகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்த மிக்சிக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விலையில்லா பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கிலிருந்து இவை கடத்திவரப்பட்டனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS