சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்


இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சசிகுமார் கொல்லப்பட்ட தகவல் பரவிய உடன் கோவை முழுவதும் கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனையடுத்து போலீசார் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS