வேதாரண்யம் அருகே கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் வீசும் பலத்த காற்று காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், காற்று காரணமாக படகுகள் தத்தளித்ததால், மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இரண்டாவது நாளாக இன்றும் கடலுக்குச் செல்ல முடியாமல் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS