இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரை விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களும், கோடியக்கரை அருகே கடந்த ஆகஸ்டில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்ட அவர்கள், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களும் தங்களை விடுவிக்கக் கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து 4 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS