'வாழும்போது ரத்ததானம், வாழ்ந்த பிறகு உடல்தானம்'.... விழிப்புணர்வு மாராத்தான்


உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

‘வாழும்போது ரத்ததானம், வாழ்ந்த பிறகு உடல்தானம்’ என்ற கருத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட மராத்தானில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என்ற பிரிவுகளில் நடைபெற்றது. தென்னூர் உழவர்சந்தை மைதானத்திலிருந்து தொடங்கிய மராத்தான் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆண்களுக்கான 21 கிமீ பிரிவில் ஜோஸ்வா, சூர்யா ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கஸ்தூரி, ரேணுகா ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்தனர். 10கிமீ ஆண்கள் பிரிவில் கார்த்திக், எஸ்.ஜெ.சவான் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பெண்கள் பிரிவில் ஆர்.ஜோதி, அர்ச்சனா ஆகியோர் முதல் 2 இடங்களையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் ரொக்க தொகையும் பரிசாக வழங்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS