ஹவாலா பணம் கொள்ளை வழக்கு: விசாரனை வளையத்தில் மேலும் பல காவல் துறை அதிகாரிகள்


கோவையில் ஹவாலா பணம் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்துகுமாரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் மேலும் 2 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் திருப்பூரில் கடந்த ஆண்டு மருந்து வாகனம் ஒன்று கடத்தப்பட்டதில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. முத்துகுமாரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அவர் ஹவாலா தொடர்பான பல வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இதனால் கோவை தனிப்படை காவல் துறையினர் முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி கோவை வழியாக கேரளாவிற்கு சென்ற கார் மதுக்கரை அருகே மடக்கப்பட்டு மூன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷபீர், சுபேஷ், சுதீஷ் ஆகிய மூவரும் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆய்வாளர் முத்துக்குமார்,உதவி காவல் ஆய்வாளர் சரவணன் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS