கோவை கலவரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்


கோவையில் நடைபெற்ற வன்முறை செயலை ஆதாயமாக்கி சில கும்பல் செல்போன் கடையினுள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூக வ‌லை‌த்தளங்களில் பரவி வருகிறது.

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 22-ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் தீடிரென வன்முறை வெடித்தது .இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட கடைகள், பேருந்துகள்,ஆட்டோக்கள்,கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வன்முறை செயலை ஆதாயமாக்கி சில கும்பல் செல்போன் கடையினுள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூக வ‌லை‌த்தளங்களில் பரவி வருகிறது. அந்த கும்பல், கடையை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS