பாரா ஒலிம்பிக் தங்க மகன் மாரியப்பனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சம்பத், மாரியப்பனை பூங்கொத்து கொடுத்து நேரில் வரவேற்றார். பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என திரளான மக்கள் அவரை வரவேற்றனர். அதேபோல அவரது சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் மேள, தாளம் முழங்க மாரியப்பனை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாரியப்பனை வரவேற்றும், வாழ்த்தியும் ஊர்மக்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை வரவேற்கும் விதமாக பெரிய வடகம்பட்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS