ஏழைகள் பசியாற... சென்னையில் மேலும் 107 'அம்மா உணவகங்கள்'


சென்னையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 107 அம்மா உணவகங்கள் இன்று காலை திறக்கப்பட்டன. இதற்கான விழா 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் நடந்தது.

சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்

அம்மா உணவகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இத்திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அம்மா உணவகங்கள் பொது இடங்களில் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ளதால் புற நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பயனடைகின்றனர். இதுவரை மாநகராட்சி வார்டுகள் மற்றும் மருத்துவமனைகள் என மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து தற்போது மேலும் 107 அம்மா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டன. இதற்கான விழா 35-வது வார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பி. வெற்றி வேல், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் லட்சுமி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS