தங்கமகன் மாரியப்பன் இன்று தமிழக ஆளுநருடன் சந்திப்பு


பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற, மாரியப்பன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்கிறார்.

முன்னதாக, ரியோவில் இருந்து டெல்லி திரும்பிய மாரியப்பன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்து தங்க மகன் மாரியப்பனை வரவேற்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS