அன்புள்ள முதலமைச்சர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த் வாழ்த்து


அன்புள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் காய்ச்சல் குணமடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் ‌என்று எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS