முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது?: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


முதலமைச்சர் ஜெயலலிதாவின் காய்ச்சல் குணமடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் ‌என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை முன்பாக அதிமுக தொண்டர்கள் பலர் நேற்று இரவும் விடிய விடிய காத்திருந்தனர். மருத்துவமனை முன்பு இன்றும் ஏராளமான தொண்டர்கள் குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வருவோர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS