வன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்‌ தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ந‌டவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்து முன்னணி பிரமுகரை மர்ம நபர்கள் கொலை செய்ததன் எதிரொலியாக கோவை நகரின் பல பகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதுடன் சில இடங்களில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS