சென்னையில் ரஜினியுடன் கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பு


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, ‌சென்னையில் திரைப்பட நடிகர் ரஜினி காந்தை ‌சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷின் வீட்டில் இந்த சந்திப்பு ‌நடந்தது. 20 நிமிடங்கள் ‌இந்த சந்திப்பு நீடித்தது.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் நிரஞ்பாண்டே என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் தோனியின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள், விளையாட்டு துறையில் தோனி கடந்து வந்த பாதை குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்களை வைத்து மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற தோனி, பின்னர் ரஜினியை , தனுஷின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது

POST COMMENTS VIEW COMMENTS