ஹவாலா பணம் கொள்ளை தொடர்பான வழக்கு.. கொள்ளையர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்


கோவை மதுக்கரை அருகே மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷபீர், சுபேஷ், சுதீஷ் ஆகிய மூவரும் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களை வரும் 7 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையிலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு சென்ற கார் மதுக்கரை அருகே மடக்கப்பட்டு மூன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS