முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி... பாதுகாப்புக்கு காவல்துறையினர் குவிப்பு


முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை வளாகத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையின் 3 நுழைவாயில்களும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய நுழைவாயில்களுக்கு செல்லும் கிரீம்ஸ் சாலை, காதர் நவாப் கான் சாலையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகு மருத்துவமனைக்குள் நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிமுக நிர்வாகிகள், அரசு உயரதிகாரிகள் அனைவரும் முதன்மை நுழைவாயில் வழியாக மருத்துவமனைக்குள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகம், சாலையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளதால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தலைமையில் 200க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS