வைகை அணையை தூர்வாரக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு


வைகை அணையை தூர்வாரி, நீர் சேமிப்பு அளவை அதிகப்படுத்த உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு பொதுநல வழக்கு மைய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அணையை தூ‌ர்வாருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை மேல்மட்டக்குழு ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கட்டங்களாக தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS