கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் படுகொலை


கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளார் சசிக்குமார், அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

சுப்ரமணியம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சசிகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது‌ உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. இதனை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS