தமிழகத்தில் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்... காவிரிப் பாசன விவசாயிகள் வலியுறுத்தல்


தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள் நீர்வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இதையடுத்து தமிழக டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்பா சாகுபடி முழுமை பெறத் தேவையான தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்த விவசாயிகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS