தேனி அருகே தண்ணீர்த் தொட்டிக்கு கீழே இயங்கும் நூலகம்!


தேனி மாவட்டம் பண்ணைப்புர‌த்தில் தண்ணீர‌த் தொட்டிக்கு கீழே உள்ள ஒரு அறையில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு தனிக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 18 லட்ச ரூபாய் ஒதுக்கியும் அதற்கான பணி தொடங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. நூலகத்தில் மின் வசதி இல்லாததால் அங்கு ‌அமர்ந்து புத்தகங்களை வாசிக்க முடியவில்லை என மாணவர்களும், பொ‌துமக்களும் கூறுகின்றனர். நூலகத்தில் புத்தகங்கள் கணிசமாக இருந்தபோதிலும், அவற்றை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை எனவும் பண்ணைப்புரம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS