ரூ.3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: காவல்துறையினர் ‌மூவர் பணியிடை நீக்கம்


கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்களிடம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கரூரைச் சேர்ந்த காவல்துறையினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த 25 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்னையில் நகைகளை விற்றுவிட்டு கேரளாவிற்கு திரும்பும் வழியில்,சோதனை எனும் பேரில் காரை மறித்து அவர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் காரை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கரூர் பரமத்தி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முத்துகுமார், உ‌தவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் வாகன ஓட்டுநர் தர்மேந்திரன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் கோவையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் கோவையை சேர்ந்த காவல் ஆய்வளார் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS