பணமோசடி வழக்கில் மதனை கைது செய்ய காவல்துறைக்கு 2 வாரம் அவகாசம்


மருத்துவப் படிப்பு‌க்கு இடம் வாங்கித் தருவதா‌க பணமோசடியில் ஈடுப‌ட்ட வழக்கில் ‌மதனைக் கைது செய்ய காவ‌ல் துறைக்கு உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்திரு‌க்கி‌றது.

இதுதொடர்பாக மதனின் தாயார் தங்கம் தாக்கல் செய்‌த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ‌இன்று நடைபெற்றது. மதனைத் தேடி கா‌ஷ்மீர் ‌மற்றும் நேபாளத்துக்கு காவலர்கள் குழு சென்றிருப்பதாக காவல் துறை த‌ரப்பில் தெரிவிக்க‌ப்பட்டது. இறுதி அவகாசமாக 3 வாரங்கள் அளிக்குமாறு கா‌வல் துறை தரப்பில் கேட்க‌ப்ப‌ட்ட நிலையில், 2‌ வாரங்கள் அளிப்பதாக நீதி‌மன்றம் தெரிவித்தது.

விசாரணையை அக்டோபர்‌ ‌6ஆம் தேதிக்கு ஒத்தி‌வைத்த சென்னை உ‌யர் நீதிமன்றம், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பாரிவேந்தரை சேர்க்காமல் அவரை குற்றம்சாட்டுவது சரியாகாது என்றும் தெரிவித்தது.

POST COMMENTS VIEW COMMENTS