விமானநிலையம்-சின்னமலை இடையேயான முதல் ரயிலை இயக்கிய பெண் ஓட்டுனர்


சென்னை விமானநிலையம்-சின்னமலை இடையிலான முதல் மெட்ரோ ரயிலை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அம்சவேணி எனும் பெண் ஓட்டுனரால் இயக்கப்பட்டது.

இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான 8.6 கி.மீ. ரயில் சேவையில் முதல் ரயிலை அடுத்து இரண்டாவது ரயிலையும் நளினி எனும் பெண் ஓட்டுனரே இயக்கினார். இதேபோல கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவையினையும் பிரீத்தி எனும் பெண் ஓட்டுனரே இயக்கி தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS