வாங்காத கடனைக் கட்டச்சொல்லி வற்புறுத்துவதாகப் புகார்: வங்கி மேலாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வாங்காத கடனை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாக குளச்சலில் இந்தியன் வங்கியின் கிளை மேலாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சலை அடுத்த பத்தறை காலனியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி உட்பட 8 பேருக்கு குளச்சல் இந்தியன் வங்கி கிளையில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாகவும் அதனை செலுத்துமாறும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 8 பேரும் வாங்காத கடனை கட்ட சொல்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கியில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

POST COMMENTS VIEW COMMENTS