‌ராம்குமார் பிரேத பரிசோதனை நிறுத்தி வைப்பு


ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் அவரது குடும்பத்தினர் சார்பில் ஒரு மருத்துவர் இடம் பெறுவது குறித்து நீதிபதிகளிடையே ஏற்பட்ட மாற்று கருத்து காரணமாக, மூன்றாவது நீதிபதியின் கருத்தை கேட்க முடிவு செய்து, வழக்கை தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் பெற்றோரின் மனநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதி, ராம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை மருத்துவரை நியமிக்காமல் கூடுதலாக மற்றொரு அரசு மருத்துவரை ஏன் நியமிக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

POST COMMENTS VIEW COMMENTS