‌மவுலிவாக்கம் கட்டடம் சில நாட்களில் இடிப்பு.... சிஎம்டிஏ அதிகாரிகள் ‌இறுதிக் கட்ட ஆய்வு


சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடம் சில நாட்களில் வெடிவைத்து இடிக்கப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

இடிக்கப்பட உள்ள கட்டடத்தின் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டடங்களையும் அவர்கள் வீடியோ பதிவு செய்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28ல் நிகழ்ந்த விபத்தில் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அருகிலிருந்த கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் அதை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS