ராம்குமார் உயிரிழந்த சம்பவம்... புழல் சிறையில் மனித உரிமை ஆணையம் விசாரணை


மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைய அமைப்பின் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் சிறைத்துறை துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராம்குமார் தங்கியிருந்த அறை, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சமையலறை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ஆய்வு நடத்தினர்.பின்னர், சிறைக்காவலர் ஜெயராமன், தலைமைக் காவலர் பேச்சிமுத்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மென்பொறியாளர் சுவாதி கொலை வ‌ழக்கில் கைதாகி சிறையிலிருந்த ராம்குமார் நேற்றுமுன் தினம் புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்‌டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS