மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு... உயிர் சூழல் மேம்பட்டிருப்பதாக வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி


கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது காட்டின் உயிர்சூழல் மேம்பட்டிருப்பதை காட்டுவதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது காட்டின் ஆரோக்கியத்தை அடையாளம் காட்டுகிறது.வனத்துறையின் கண்காணிப்பு கேமிராக்கள் இதனை உறுதிபடுத்தியிருப்பது வன ஆர்வலர்களை மகிழ்ச்சிக்கொள்ள செய்திருக்கிறது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தட பாதையாக இருப்பதால் இங்கு யானைகள் கூட்டம் கூட்டமாக இருப்பது வழக்கமானது தான். ஆனால் அரிய வனவிலங்காக கருதப்படும் கழுதைப்புலிகளும் இங்கு வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.இதேபோல் கரடிகள்,செந்நாய்கள் என பல்வேறு விலங்கினங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

புலியின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கூடுதலாக கேமராக்களை பொருத்தி வரும் வனத்துறையினர் காட்டை காக்க பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS