வேளாண்துறை முறைகேடு: சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு


வேளான் துறையில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து, சிறைதண்டனையும், அபராதமும் விதித்து சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்‌ளது.

சிவகங்கை வேளான் துறையில் கடந்த 1986 ஆம் ஆண்டு துணை இயக்குநராக பணிபுரிந்துவந்த ராமையா என்பவரும், உதவி அலுவலராக இருந்த இளங்கோவன் மற்றும் பழனிவேல் ஆகியோரும் கடலை கொள்முதல் செய்ததில் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அவ்வழக்கு நடைபெற்று வந்தது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அச்சமயம் துணை இயக்குநராக இருந்தவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதமும், துணை அலுவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைதண்டனையும் 30ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS