தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது தடியடி: கேரளப் போலீசாரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது பரம்பிக்குளத்தில் கடந்த 12ஆம் தேதி தாக்குதல் நடத்திய கேரள போலீசாரைக் கண்டித்து, பொள்ளாச்சியில் பொதுபணித்துறை அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனத்தை கேரள வனத்துறை அதிகாரிகள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். இதனால் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நூற்றுக்கணக்கானோர், பரம்பிக்குளம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரள வனத்துறை அதிகாரிகள் தூண்டுதலில் கேரள போலீசார், பொதுமக்கள் மீதும், பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் மீதும் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்தனர். கேரள போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து பொள்ளாச்சியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்ப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

POST COMMENTS VIEW COMMENTS