விழுப்புரம் திமுக நகரச் செயலாளர் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த 11 பேர் கைது


விழுப்புரத்தில் திமுக நகர செயலாளர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இருசப்பன் அளித்த தகவலை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய வேறு சிலரையும் தேடிவருவதாக போலீசார் கூறினர். கடந்த 14 ம் தேதி விழுப்புரம் திமுக நகர செயலாளர் செல்வராஜ் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS