தூத்துக்குடி சென்ற விமானத்தின் ட‌யர்‌ வெடித்து விபத்து


சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானத்தின் பின்பக்க டயர் வெடித்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறங்கியது. ‌72 பயணிகளுடன் புறப்பட்‌ட விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கியதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவன‌‌‌ விமானம் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் கதவுகள் சரியாக மூடப்பட்டதா என சந்தேகம் எழுந்ததால் அவரசமாக தரையிறங்கியது.

POST COMMENTS VIEW COMMENTS