வேலூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


வேலூர் மாவட்டம் மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ‌ வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில், பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். குற்றவாளிகளை ஆம்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS