குன்னூரில் மருத்துவ குணம்‌ நி‌ரம்பிய துரியன் பழம்‌ சீசன் தொடக்கம்


குன்னூரில் குழந்தை பாக்கியம் தரும் அறியவகை மருத்துவ குணமிக்க துரியன் பழ சீசன் தொடங்கியுள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பார்லியார் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இங்கு பலா, ஜாதிக்காய், மங்குஸ்தான், மலேசியன் ஆப்பிள் உள்ளிட்ட பல வகை மரங்கள் உள்ளது. இதில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறப்படும் துரியன் பழ மரங்களும் இங்குள்ளது.

இப்பண்ணையில் 34 துரியன் பழ மரங்கள் உள்ளது. ஆண்டு தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் இந்த பழங்களின் சீசன் காலமாகும். தற்போது இப்பண்ணையில் அறியவகை பழமான துரியன் பழம் வரத்துவங்கியுள்ளதால். இப்பண்ணைக்கு உள்ளுர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு வந்து இந்த அறியவகை துரியன் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த பழங்கள் ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யப்பட்டு, கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு பழப்பண்ணையில் இந்த பழங்கள் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS