கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆட்சியர் அலுவலகம் அருகே அவலம்


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலு‌ள்ள கோவிலில், தலித் மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரும்பாலை கிராமத்தில் உள்ள உடுக்கை மாரியம்மன் கோவிலை சிலர் ஆக்கிரமித்து‌ வைத்திருப்பதாகவும், அங்கு சுவர் எழுப்பி தலித் மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடமும் புகா‌ர் அளித்தும் இதுவரை நடடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கோவிலில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடித்து அனைத்து மக்களும் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட‌ மக்கள் வலியுறுத்தினர்.

POST COMMENTS VIEW COMMENTS