மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவர்


கர்நாடக மாநிலம் தரிக்கேரி அருகே கொலை செய்த மனைவியின் தலையுடன் காவல்நிலையத்திற்கு கணவர் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவானி கிராமத்தைச் சேர்ந்த ரூபா என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், அதை கணவர் சதீஷ் பலமுறை கண்டித்தும் இத்தொடர்பை ரூபா தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி ரூபாவை வேறொருவருடன் பார்த்த சதீஷ், ஆத்திரத்தில் தாக்கினார். அதில் அந்த நபர் தப்பிய நிலையில், மனைவி ரூபாவின் தலையைத் துண்டித்து கொலை செய்தார்.

Read Also ->‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி 

துண்டித்த தலையோடு, காவல் நிலையத்துச் சென்று சதீஷ் சரணடைந்தார். மனைவி தலையுடன் சதீஷ் காவல்நிலையம் வந்ததை அங்கிருந்த காவலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS