கத்தி முனையில் 230 சவரன் கொள்ளை


வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் வீட்டில் 230 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பகல் வேளையில் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் 230 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் யோக சேரன் என்பவர், தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த யோக சேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வேலைக்காரர் மகாராணி ஆகியோரை தாக்கிவிட்டு கட்டிப்போட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கத்தி முனையில் அவர்களிடம் நகைகளை கேட்டு மிரட்டிய அந்த கும்பல் பெட்டியிலிருந்த 200 சவரன் மற்றும் அவர்கள் அணிந்திருந்த 30 சவரன் என சுமார் 230 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரண நடத்தினர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Read Also -> வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'

POST COMMENTS VIEW COMMENTS