நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள் 


கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பைக் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு வட மாநில இளைஞர்கள்  சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்துள்ளனர். அவர்களை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் சோதனை செய்த போது, அவர்களிடம் ஏராளமான பைக் சாவிகள் இருந்துள்ளன.

இதைதொடர்ந்து அவர்களை அடித்து உதைத்து விசாரித்ததில் தொடர்ந்து அப்பகுதியில் பைக், நகை, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஒரு இளைஞர் உடந்தையாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, செல்போனில் தொடர்பு கொண்டு அவரையும் வரவழைத்துள்ளனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்ததை அடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS