முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை - எஸ்பிஐ வங்கியில் ரூ.42 லட்சம் கொள்ளை


ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னல் வழியாக உட்புகுந்த திருடர்கள் லாக்கரை உடைத்து 42 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஜெ.என்.டி.யூ பல்கலைகழக வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கேஸ் கட்டரை வைத்து லாக்கரை உடைத்துள்ளனர். லாக்கரில் இருந்த 42 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த கொள்ளை சம்பவம் அதிகாலை 2.30 முதல் 3.30 மணிக்கு இடையே நடைபெற்று இருக்கலாம் என தெரிகிறது. சி.சி.டிவியில் பதிவான காட்சிகளை வைத்து பார்க்கும்போது கொள்ளையர்களுக்கு 30 முதல் 40 வயது உள்ள உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உள்ளே நுழைந்த உடன் அவர்கள் சிசிடிவி கேமிராவை தான் உடைத்துள்ளனர்” என்று தெரிவித்தனர். 

POST COMMENTS VIEW COMMENTS