வேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை ! 8 பேர் மீது 'போக்ஸோ'


புதுச்சேரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இந்த 8 பேர் மீதும் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்நதவர் 16 வயது சிறுமி ரேகா (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள கிராம பகுதியான திருக்கனூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இவர் தினமும் தன்னுடைய நிறுவனத்துக்கு தனியார் பஸ்ஸில் சென்று வந்துள்ளார். அப்போது திருக்கனூரைச் சேர்ந்ச விக்கி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நண்பராய் இருந்த விக்கி திடீரென அந்தப் பெண்ணுக்கு தினமும் பாலியல் தொல்லைகளை கொடுக்க தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து விக்கியின் நண்பர்கள் 7 பேரும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண் விக்கி உள்ளிட்ட 8 பேர் மீதும் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விக்கி, முகிலன், கண்ணதாசன், சூர்யா, அசோக், தேவா, கலை, சூர்யா ஆகியோர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 8 பேரும் தலைமறைவாக இருப்பதால், போலீஸார் தீவிரமாக அவர்களை தேடி வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS