மணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஆற்று  மணல் திருட்டுத்தனமாக அள்ளுவதில் இரு தரப்பினர் தகராறில் ஒருவர் வெட்டி கொலை. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் டிராக்டரில் நம்பியாற்றில் இருந்து மணல் அள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு , ஆறுமுகம் இருவரும் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஆற்று மணல் அள்ளுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரு தரப்பினர் மீதும் நாங்குநேரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்தல் வழக்கத்தில் சுபையாவை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். தான் கைது செய்ததற்கு சுடலைக்கண்ணுவும் , ஆறுமுகனும் தான் காரணம் என்று கூறி ஜாமினில் வெளியே வந்து நேற்று மதியம் ஆறுமுகம் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளான் சுப்பையா. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் , சுடலைக்கண்ணு இருவரும் இன்று அதிகாலை மஞ்சங்குளம் அருகே உள்ள வயலில் படுத்து இருந்த சுப்பையாவை சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது தகவல் அறிந்து வந்த நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS