தூக்கில் தொங்கிய நேபாளி ! காவல்துறை விசாரணை


மயிலாப்பூர் அருகே அதிகாலையில் நோபாள வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.

மயிலாப்பூர் விஎம் தெருவில் உள்ள மரம் ஒன்றில் இன்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்குவதாக மயிலாப்பூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறை விசாரணையில்  தூக்கில் தொங்கிய நபர் நேபாளத்தைச் சேர்ந்த கமல் பகதூர் (30) என்றும் அவர் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டல் ஊழியர் உடை அணிந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS