போலிச் சான்றிதழ் மூலம் ராணுவத்தில் சேர்ந்தவர் கைது


தருமபுரியை சேர்ந்த முனியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர்ந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் என்றழைக்கப்படும் எம்ஆர்சி ராணுவத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த முனுசாமி வயது (23) சிப்பாயாக சேர்ந்துள்ளார். இவர் பெயர் நவீன் என்றும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறி வேலைக்கு சேர்ந்துள்ளார். 

இந்நிலையில் முனியசாமி கொடுத்த சான்றிதழை ராணுவ அதிகாரிகள் சரிபார்த்த போது, அவை போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து போலிச் சான்றிதழ் கொடுத்த குற்றத்திற்காக முனியசாமி, வெலிங்டன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், விசாரணை மேற்கொண்டார். பின்னர் குன்னூர் நீதிமன்றத்தில் முனுசாமியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS