ஆன்லைனில் வைரல் ஆன வீடியோவால் உஷாரான போலீசார்..!


இளம்பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அதனை வீடியோகவும் எடுத்து ஆன்லைனில் வைரலாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். பின்னர் அதனை வீடியோகவும் பதிவு செய்த அவர்கள் இணையத்தில் பதிவேற்றினர். இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக காயாவில் கடந் மே மாதமும் இளம்பெண்ணின் வீடியோ காட்சிகளை ஆன்லைனில் பரவவிட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளளது.

POST COMMENTS VIEW COMMENTS